திபெத்தின் தலைநகர் லாசாவில் நடந்த கலவரத்தில் 10 பேர் பலியானதாக சீன அரசின் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சீன அரசை எதிர்த்து லாசாவில் நேற்று புத்தத் துறவிகளும், திபெத்திய மக்களும் இணைந்து போராட்டம் நடத்தினர். இதில் திபெத்தியர்கள் வன்முறையில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, சீனப் படையினருடன் கடும் மோதல் ஏற்பட்டது.
இந்தக் கலவரத்தை அடக்கும் வகையில், சீனப் படையினர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாகவும், இதில் 10 பேர் பலியானதாகவும் சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திபெத்தில் கடந்த 20 ஆண்டுகளாக இருந்துவரும் சீன அடக்கு முறைக்கு எதிரான போராட்டங்கள் அதிகரித்துள்ள நிலையில், அங்கு அதிக அளவிலான கட்டுப்பாடுகளை சீனா விதித்துள்ளது.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட திபெத்தியர்கள் 10 பேர், சீனப் படையினரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இறந்திருப்பது பெரும் பதற்றதை ஏற்படுத்தியுள்ளது.
அதேநேரத்தில், இந்தக் கலவரத்தில் வெளிநாட்டினர் எவரும் கொல்லப்படவில்லை என்று சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.