சர்வதேச தீவிரவாதி ஒசாமா பின்லேடன் பாகிஸ்தான் எல்லையில் உள்ள மலைக்குகையில் பதுங்கியிருப்பதாக அமெரிக்கா ராணுவம் தெரிவித்துள்ளது.
சர்வதேச தீவிரவாதி ஒசாமா பின்லேடனை பிடிக்க உலகம் முழுவதும் அமெரிக்கா ராணுவம் வலை விரித்துள்ளது. எனினும், இன்னும் அவர் சிக்கவில்லை.
இந்நிலையில், கடந்த ஆண்டு முகமது ரஹீம் என்ற ஆப்கன் தீவிரவாதி ஒருவன் அமெரிக்க ராணுவத்திடம் பிடிபட்டான். இவன் பின்லேடனின் முக்கிய கூட்டாளியாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்த தகவல் தற்போதுதான் வெளியாகியுள்ளது.
இதுவரை ராணுவத்தினரின் விசாரணையில் வைக்கப்பட்டிந்த ரஹீம், தற்போது கியூபா பகுதியிலுள்ள அமெரிக்க கைதிகள் முகாமில் சிறை வைக்கப்பட்டுள்ளான். இவன் மீது அமெரிக்க மற்றும் சர்வதேச சட்ட விதிமுறைகளின்படி நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
ரஹீமிடம் நடத்திய விசாரணையின் மூலம், பாகிஸ்தான் எல்லையில் தோரா போரா மலைப்பகுதியில் உள்ள ஒரு குகையில் பின்லேடன் பதுங்கியிருப்பதாக அமெரிக்க ராணுவம் நம்பிக்கை தெரிவித்துள்ளது