தாய்லாந்து நாட்டில் உணவு விடுதி ஒன்றில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் இரண்டு பேர் பலியானார்கள். மேலும், 14 பேர் பலத்த காயமடைந்தனர். தாய்லாந்தில் உள்ள பாட்டாணியின் வடக்கு பகுதியில் சிஎஸ் என்ற எட்டு மாடி உணவு விடுதி அமைந்துள்ளது.
இந்த குண்டு வெடிப்பின் காரணமாக உணவு விடுதி மேலாளர் உட்பட இரண்டு பேர் பலியானார்கள். மேலும் பலர் காயம் அடைந்தனர். இதுவரை இந்த குண்டு வெடிப்பிற்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.