ஆப்கானிஸ்தானில் நடந்துவரும் ஒரு தொலைக்காட்சி பாட்டுப்போட்டி நிகழ்ச்சியில் மூன்று பேர் கொண்ட இறுதிச் சுற்றுக்கு முதல்முறையாகத் தெரிவான பெண்ணொருவரை நேயர்கள் வாக்களித்து போட்டியிலிருந்து வெளியேற்றியுள்ளனர்.
போட்டியில் இறுதிச் சுற்றுவரை வந்ததே தனக்குப் பெரிய கௌரவம் என்று கூறிய லிமா சஹார் என்ற அந்தப் பாடகி, தனக்கு வாக்களித்தவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
ஆனால் இந்தப் ஆப்கன் ஸ்டார் என்ற இந்தப் போட்டியில் பங்கேற்றதற்காக பழமைவாதிகள் அவரை விமர்சித்துள்ளனர்.
மௌலவி அப்துல் ரயூஃப் என்ற ஒரு மதபோதகர், அப்பாடகியை ஆப்கானிஸ்தானின் சாத்தான் என்று குறிப்பிட்டதோடு, சக ஆப்கானியர்களுக்கு அவர் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளார் என்றும் தெரிவித்திருந்தார்.