அல்பேனிய தலைநகர் டிரானாவுக்கு அருகே இராணுவ வெடிபொருட் களஞ்சியம் ஒன்றில் தொடர்ச்சியான சக்திமிக்க வெடிப்புகள் இடம்பெற்றுள்ளன.
இதில் பலர் கொல்லப்பட்டதாக, அல்பானிய பிரதமர் சாலி பெரிசா அவர்களை ஆதாரம் காட்டி கூறப்படுகிறது.
குறைந்தது 150 பேர் காயங்களுக்குள்ளானதாகவும், இவர்கள் தீக்காயங்கள், இரத்தக்கட்டுகளால் அவதிப்படுவதாகவும், இவர்களில் பலர் பறந்துவந்த கண்ணாடிகள் மற்றும் இரும்புத் துண்டுகள் ஆகியவற்றால் தாக்கப்பட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன.
இந்த வெடிப்புக்களின் சக்தி டிரானாவிலும், சுமார் 20 கிலோமீற்றர்கள் தொலைவில் உள்ள கடற்கரைச் சுற்றுலாதத் தளமான டுரஸிலும் உணரப்பட்டது.