நேபாளத்தில் நடைபெற உள்ள பொதுத் தேர்தலை பார்வையிட ஐரோப்பிய கமிஷன் 110 உறுப்பினர்களை அனுப்ப உள்ளது.
நேபாளத்தில் வருகிற ஏப்ரல் 10 ம் தேதியன்று பாராளுமன்றத்திற்கான பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில் இத்தேர்தல் நியாயமாகவும் , நேர்மையாகவும் நடைபெறுகிறதா என்பதை நேரில் பார்வையிடுவதற்காகவும் , தேர்தல் ஏற்பாடுகள் குறித்து அறிவதற்காகவும் 110 உறுப்பினர்களை கொண்ட தேர்தல் பார்வையாளர்கள் குழு ஒன்றை ஐரோப்பிய கமிஷன் அனுப்ப உள்ளது.
நேபாளம் செல்லும் இவர்கள் இம்மாதம் 22 ம் தேதி முதல் 10 வார காலத்திற்கு நேபாளத்தில் தங்கி, புதிய பாராளுமன்றம் அமைவது மற்றும் புதிய அரசு பதவியேற்பது ஆகியவை குறித்து பார்வையிடுவார்கள் என ஐரோப்பிய கமிஷன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.