பாகிஸ்தான் புதிய பாராளுமன்றம் இன்று கூட உள்ள நிலையில், பிரதமர் யார் என்பதை முடிவு செய்வதில் இன்னும் இழுபறி நிலை நீடிக்கிறது.
பாகிஸ்தான் புதிய பாராளுமன்றம் இன்று காலை 11 மணிக்கு கூடுகிறது.பாராளுமன்ற தேர்தலில் அதிக இடங்களை பெற்று தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள பாகிஸ்தான் மக்கள் கட்சி , முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பிஎம்எல் - (என் ) கட்சியுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளது.
இந்நிலையில் , பிரதமர் பதவியை ஏற்பதில் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இணை தலைவர் சர்தாரிக்கு, சில் நடைமுறை சிக்கல்கள் இருப்பதால் , தற்காலிகமாக தனது சகோதரியை பிரதமராக்க அவர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆனால் பெனாசிர் பூட்டோவின் நீண்ட கால விசுவாசியும் , பாகிஸ்தான் மக்கள் கட்சியின் துணை தலைவருமான மக்தூம் அமின் பிரதமர் பதவிக்கான போட்டியிலிருந்து வாபஸ் பெற வைக்க சர்தாரி தரப்பில் தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனால் பிரதமர் பதவியை ஏற்கப்போவது யார் என்பதில் இழுபறி நிலை இன்னும் நீடிக்கிறது.