அமெரிக்க துணை ஜனாதிபதி டிக் செனி, அறிவிக்கப்படாமல் ஈராக் நாட்டுக்கு நேற்று சென்றார். அவர் சவுதி அரேபியா, ஜெருசலேம், பாலஸ்தீனம்,துருக்கி, ஓமன் ஆகிய நாடுகளில் 9 நாள் பயணம் செய்கிறார். இந்த சுற்றுபயணத்தின் முதல்கட்டமாக அவர் ஈராக் சென்றார்.
ஈராக் போர் தொடங்கிய 5-வது ஆண்டு தினத்துக்கு முன்னதாக அவர் அந்த நாட்டுக்கு சென்று இருக்கிறார்.
அவர் அமெரிக்க ராணுவத் தளபதிகளையும் வீரர்களையும் சந்தித்து பேசினார். ஈராக் தலைவர்களையும் சந்தித்தார்.