பாகிஸ்தானின் புதிய பிரதமர் யார் என்பது குறித்து இன்னும் திட்ட வட்டமான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை இருப்பினும் அணிமையில் முன்னாள் பிரதமரும் பாகிஸ்தானின் மக்கள் கட்சியின் முன்னாள் தலைவியுமான பெனாசீர் பூட்டோவின் கணவர் ஆசிப் அலி ஜர்தாரிக்கு அந்த வாய்ப்பு அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் அநேகமாக இது குறித்து இறுதி முடிவு இன்று வெளியாகலாம்.பாகிஸ்தானில் கடந்த மாதம் 18 ஆம் திகதி பாராளுமன்ற தேர்தல் இடம்பெற்றது.
பெருமான்மை கிடைக்கவில்லை எனினும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிரின் மக்கள் க்கட்சிக்கு அதிக இடங்களும் அதற்கு அடுத்தப்படியாக இன்னொரு முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரிப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் கட்சிக்கும் ஓரள்வு அதிக இடங்கள் கிடைத்திருந்தன.இதை அடுத்து இவ்விரு கட்சிகளும் கூட்டாக ஆட்சி அமைக்க ஒப்பந்தம் செய்துள்ளனர்.