பாகிஸ்தானில் வடமேற்கு பகுதியில் உள்ள டாரா ஆதம் கேல் என்ற இடத்தில் உள்ள பெண்கள் பள்ளிக்கூடத்தில் படிக்கும் சிறுமிகளை பள்ளிக்கூடத்துக்கு செல்லக்கூடாது என்றும் அவர்கள் மத போதனை பாடசாலைக்கு வரவேண்டும் என்று தீவிரவாதிகள் எச்சரித்தனர்.
இந்த எச்சரிக்கைக்கு மாணவிகள் செவிசாய்க்க வில்லை. அவர்கள் தொடர்ந்து பள்ளிக்கூடத்துக்கு சென்று வந்தனர். இதனால் அந்த பள்ளிக்கூடத்துக்கு தீவிரவாதிகள் வெடிவைத்து தகர்த்தனர். இதில் 9 அறைகள் கொண்ட அந்த பள்ளிக்கூடம் முற்றிலும் இடிந்து நொறுங்கியது.