பாகிஸ்தானில் ஆப்கானினுடனான எல்லையை ஒட்டிய ஒதுக்குப்புறமான பழங்குடியினப் பகுதியில் இராணுவத் தளமொன்றில் நடத்தப்பட்ட ஒரு தற்கொலை கார் குண்டுத் தாக்குதலில் படையினர் குறைந்தபட்சம் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
தெற்கு வாசிரிஸ்தானின் முக்கிய நகரான வனாவில் இராணுவ முகாமின் நுழைவு வாயிலில் குண்டுதாரி வாகனத்தை கொண்டுவந்து மோதி வெடிக்கச்செய்ததில் சுமார் ஒரு டஜன் அளவிலானோர் காயமடைந்திருப்பதாகவும் இராணுவ அதிகாரிகள் கூறுகின்றனர்.
2001ஆம் ஆண்டு ஆட்சியிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட பின்னர் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறிய தாலிபான் மற்றும் அல்கைதா சந்தேகநபர்களிடம் மோதுவதற்காக ஆயிரக்கணக்கான துருப்பினரை பாகிஸ்தான் இராணுவம் அந்த இடத்தில் பணியில் ஈடுபடுத்தியுள்ளது.