பாகிஸ்தானில் புதிய அரசு இன்னும் சில நாட்களில் பதவி ஏற்க இருக்கிறது. எனவே, பாகிஸ்தானின் உளவுத்துறை, தன்னிடம் இருக்கும் முக்கிய தஸ்தாவேஜுக்களை அழித்து வருகிறது. இதில் பாகிஸ்தான் அதிபர் முஷரப், பிரதமர் ஷாகுத் அஜீஸ் , முன்னாள் ரெயில் மந்திரி ஷேக் ரஷீத், நீதிபதிகள், அரசு உயர் அதிகாரிகளின் டெலிபோன் பேச்சு டேப்புகள், மற்றும் மிகவும் ரகசியமான கோப்புகள் அடங்கும்.
இதுபற்றி உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ``ஐ.எஸ்.ஐ. உளவுப்பிரிவும் தனது முக்கியமான உளவு பணிகளில் சேகரிக்கப்பட்ட ரகசியங்களை அழித்து வருகிறது. இது இனி வரும் அரசுக்கு தேவையற்றது'' என்றார்.