தாய்வானில் எதிர்கட்சி வேட்பாளரான மா யிங் ஜியோ அவர்களை நாட்டின் வாக்காளர்கள் புதிய அதிபராகத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
குவோமிண்டாங்கட்சியைச் சேர்ந்த மா, சீனாவுடன் நெருக்கமான பொருளாதார உறவு என்ற வாக்குறுதிகளுடன் பிரச்சாரம் செய்திருந்தார்.
ஊழலற்ற தூய்மையான அரசாங்கமும், பீய்ஜிங்குடன் சமாதானமும்தான் தாய்வான் மக்கள் விரும்புவது என்று தனது வெற்றியுரையில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
சீனாவிலிருந்து முழுமையாகப் பிரிந்து உத்தியோகபூர்வமாக சுதந்திரமடைய வேண்டும் தாய்வான் என்று விரும்பும் ஜனநாயக முற்போக்குக் கட்சியின் பிரான்க் ஷியெவை விட 17 சதவீத வாக்குகள் அதிகம் பெற்று கணிசமான வாக்கு வித்தியாசத்தில் மா வென்றுள்ளார்.
பதவியிறங்கும் தாய்வான் அதிபர் ஷென் ஷி பியனைக் காட்டிலும் சீனாவுடன் மோதல் குறைவான ஒரு அணுகுமுறையையே புதிய அதிபர் கடைப்பிடிப்பார் என்று செய்தியாளர்கள் கூறுகின்றனர்