ஆப்கானிஸ்தானின் தென்பகுதியில் தாலிபான்களுக்கு எதிராக தரைவழியிலும் வான்வழியிலுமாக பெரிய தாக்குதல் ஒன்றை அமெரிக்க மற்றும் ஆப்கானியப் படைகள் நடத்தியுள்ளன.
அமெரிக்க மற்றும் ஆப்கானியப் படையினர் மீது திடீர் தாக்குதல் நடத்தப்பட்டபோது அவர்கள் பதிலடி கொடுத்ததில் ஒரு டஜனுக்கும் அதிகமான கிளர்ச்சிக்காரர்கள் கொல்லப்பட்டதாக அமெரிக்கப் படைகள் சார்பாகப் பேசவல்லவர் கூறினார்.
ஆனால் உருஸ்கான் மாகாணத்தின் தே ரவூத் நகரருகே நேற்று சனிக்கிழமை நடந்த இந்த நடவடிக்கையில் தாலிபானின் ஒரு பிரபல தளபதி உள்ளிட்டு டஜன் கணக்கான போராளிகள் கொல்லப்பட்டிருப்பதாக ஆப்கானிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.