பாகிஸ்தானில் தனது அரசியல் எதிரிகளை கொண்ட, ஆட்சிக்கு வரவுள்ள புதிய கூட்டணி அரசுக்கு, அதிபர் முஷாரஃப் அவர்கள் தனது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் தேசிய தினத்தை முன்னிட்ட இராணுவ அணிவகுப்பு ஒன்றில் உரையாற்றிய அவர், ஜனநாயகத்தின் புதிய யுகம் ஒன்று ஆரம்பமாகியுள்ளது என்று கூறியதுடன், தனது தாய் நாட்டை வளர்ச்சிப் பாதையில் இட்டுச்சென்றது தொடர்பில் தான் பெருமைப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
அதேவேளை, புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றவரும், படுகொலை செய்யப்பட்ட பேநசீர் புட்டோ அவர்களின் நெருங்கிய சகாவுமான யூசுப் ராஸா கிலானி அவர்கள், தனது புதிய அரசாங்கத்தின் ஏனைய உறுப்பினர்களைச் சந்திக்கவுள்ளார்.
அவர் பிரதமராக திங்களன்று அதிகாரபூர்வமாக தேர்வாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.