பூடானில் பாராளுமன்ற தேர்தல் இன்று நடைபெறுகிறது. இன்று காலை வாக்குப்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது.
பூடானில் கடந்த 2001ம் ஆண்டு அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வசதியாக அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர். பின்னர் கடந்த 2006ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பை மன்னர், தன் மகன் ஜிக்மி வான்சுக்கிடம் ஒப்படைத்தார்.
அதன் பின்னர் இருவரும் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, ஜனநாயகம் ஏற்படுவதற்கான அவசியம் குறித்தும் , தேர்தல் குறித்தும் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்டனர். இதனையடுத்து தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கின.
இன்று நடைபெறும் தேர்தலில் பாராளுமன்றத்திற்கு 47 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இரண்டு கட்சிகள் இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றன.
இன்று காலை வாக்குப்பதிவு துவங்கியது. மொத்தம் 865 ஓட்டு சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு முடிந்த பின்னர் மாலை 5 மணிக்கு மேல் வாக்கு எண்ணிக்கை துவங்கும்.
பூடானில் பல நூறாண்டு காலமாக நடைபெற்று வந்த மன்னராட்சி, இந்த தேர்தல் மூலம் முடிவுக்கு வருகிறது. இதை தொடர்ந்து அங்கு ஜனநாயகம் மலர்கிறது.