திபெத்தில் அண்மைக் காலமாக நிலவும் அமைதியின்மை குறித்து வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வழங்கிய விதத்தை சீனாவின் அரசு ஊடகம் கண்டித்துள்ளது.
சட்டம், ஒழுங்கை மீண்டும் நிலைநாட்ட சீன அரசாங்கம் செய்த முயற்சிகளை இராணுவ அடக்குமுறை என்று வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் தவறாக அர்த்தப்படுத்தியுள்ளனர் என்று அது கூறியுள்ளது.
இதனிடையே, சீன அரசுக்கும், நாடுகடந்து வாழும் திபெத்திய ஆன்மிகத் தலைவர் தலாய் லாமாவுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் வேண்டும் என்று மேலும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
திபெத் தொடர்பில் நிலைக்கக்கூடிய ஒரு கொள்கை சீனாவுக்குத் தேவை என்று அமெரிக்க அரசுத்துறை செயலர் கொண்டலீசா ரைஸ் தெரிவித்துள்ளார்.
பிரஞ்சு அதிபர் நிக்கோலா சர்கோசியும் சீன அதிபரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியபோது இதேபோன்ற கருத்தை முவைத்திருக்கிறார்.
திபெத் கலகங்களின்போது 130 பேர் கொல்லப்பட்டார்கள் என நாடு கடந்து வாழும் திபெத் அரசாங்கத்தினர் கூறுகின்றனர்