கிரேக்க நாட்டில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்ட நிகழ்ச்சியின் போது, திபேத்திய விவகாரம் குறித்து நடந்த ஆர்பாட்டங்கள் தொடர்பில் சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.
ஒலிம்பிக் சுடர் பீஜிங்குக்கு எடுத்துச் செல்லப்படுவதைக் குழப்பும் எந்தவொரு முயற்சியும் வெட்கக்கேடான ஒரு செயலே என்று, தமது அதிகாரபூர்வ கருத்தை முதற்தடவையாக வெளியிட்டுள்ள சீன வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே பிரெஞ்சு அதிபர் நிக்கோலா சர்கோசி சீனாவுக்கு விடுத்துள்ள ஒரு கோரிக்கையில், திபேத்துடன் பேச்சு வார்த்தைகளை சீன அதிகாரிகள் ஆரம்பிக்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.