ஒலிம்பிக் போட்டியை புறக்கணிக்க அமெரிக்க சபாநாயகர் பிலோசி முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். வரும் ஆகஸ்ட் 8ம் திகதி சீனாவில் ஒலிம்பிக் போட்டி நடக்க உள்ளது.
இந்நிலையில் தன்னாட்சி அளிக்க கோரி திபெத்தியர்கள் சீனாவிற்கு எதிரான போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் 99க்கும் மேற்ப்பட்டோர் பலியானார்கள். இந்நிலையில் அமைதியான பேச்சுவார்த்தை மூலம் சுமூக முடிவு காண வேண்டும் என்று அமெரிக்கா, சீனாவிடம் கேட்டுக் கொண்டது.
ஆனால் சீனா, திபெத்திற்கு தன்னாட்சி வழங்கும் பேச்சிற்கே இடமில்லை என்று கூறியது. இதையடுத்து ஒலிம்பிக் போட்டியை புறக்கணிக்க போவதாக அமெரிக்க சபாநாயகர் பிலோசி தெரிவித்துள்ளார்