பிரிட்டனுக்கும் ஃபிரான்ஸுக்கும் இடையே புதிய நெருக்கமான உறவுகள் ஏற்பட இருப்பது பற்றி இருநாட்டின் தலைவர்களும் பெருமகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்கள்.
பிரிட்டனில் தற்போது இராஜாங்க விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள பிரெஞ்சு அதிபர் நிக்கோலா சர்கோஸி பேசும்போது, இருநாடுகளுக்கும் ஒரே இலட்சியங்கள், ஒரே எதிரிகள் இருப்பதாகக் குறிப்பிட்டார்.
பிரிட்டிஷ் பிரதமர் கார்டண் பிரவுண் கருத்து வெளியிடும்போது, இருநாடுகளுக்கும் இடையே உறவுகள், புதிய சகாப்தம் ஒன்றில் பிரவேசிப்பதாகவும், அதிபர் சர்கோஸியுடனான தமது பேச்சுவார்த்தைகள் அதனைத் துரிதப்படுத்தும் என்றும் தெரிவித்தார்