இராக்கின் இரண்டாவது பெரிய நகரமான பாஸ்ராவிலுள்ள ஷியா இன துப்பாக்கிதாரிகள், அடுத்த 72 மணி நேரத்துக்குள், தமது ஆயுதங்களைக் களையவேண்டும் என இராக்கின் பிரதமர் நூரி அல் மலிக்கி காலக்கெடு விதித்துள்ளார்.
தீவிரவாத மதகுரு மொக்ததா அல்-சதரின் ஆதரவாளர்கள் உட்பட உண்மையான விசுவாசிகள் அனைவருக்கும் எதிராக இராக்கியத் துருப்புக்கள் இரண்டாவது நாளாக நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.
பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டும் என்று சதரின் ஆதரவாளர்கள் இப்போது குரல் எழுப்பியிருக்கிறார்கள்.
பாஸ்ரா சண்டைகளில் செவ்வாய்க்கிழமையிலிருந்து 46 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 200க்கும் அதிகமானவர்கள் காயமடைந்திருப்பதாகவும் இராக்கிய அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.