திபெத் பிரச்சனைக்கு தீர்வு காண தலாய் லாமாவுடன் பேச்சு நடத்த வேண்டும் என்ற அமெரிக்க அதிபரின் யோசனையை ஏற்க சீனா மறுத்துவிட்டது.
திபெத் விவகாரத்துக்கு அமைதியான முறையில் தீர்வு காணும் வகையில், தலாய் லாமாவின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று சீன அதிபர் ஹு ஜிண்டாவோவை தொலைபேசியில் தொடர்புகொண்டு அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் வலியுறுத்தியதாக வெள்ளை மாளிகை செய்திக்குறிப்பு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் , அதிபர் புஷ்ஷின் இந்த கோரிக்கையை சீன அதிபர் ஜிண்டாவோ நிராகரித்து விட்டார்.தலாய் லாமாவுடன் பேச்சுவார்த்தை எதுவும் நடத்தப்படாது என ஜிந்டவோ கூறிவிட்டதாக சீன வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.