பாகிஸ்தான் பழங்குடியினப் பகுதிகளில் பதுங்கியிருந்து செயல்பட்டு வரும் அல் - காய்தா தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா படைகள் ஏவுகணை தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் புதிய அரசு பதவியேற்றுள்ளதால் , வரும் காலத்தில் இந்த பகுதியில் தாக்குதல் நடத்துவதற்கான அந்நாட்டின் ஆதரவு கிடைப்பது சந்தேகமே என அமெரிக்கா கருதுகிறது.மேலும் அதிபர் பர்வேஸ் முஷாரப்பும் முன்பு போல் அதிகாரமிக்கவராக இல்லை.
எனவே புதிய அரசு, பாகிஸ்தான் எல்லைக்குள் அன்னிய படை புகுந்து தாக்குதல் நடத்த எதிர்ப்பு தெரிவிக்கலாம் என்பதால், கிலானி தலைமையிலான அரசு இவ்விவகாரத்தில் கவனம் செலுத்த துவங்குவதற்குள் , பாகிஸ்தான் பழங்குடியின பகுதிகளில் பதுங்கியுள்ள அல் - காய்தா தீவிரவாதிகளுக்கு கூடியமட்டும் அதிகபட்ச சேதத்தை ஏற்படுத்திவிட வேண்டும் என அமெரிக்கா கருதுகிறது.
அதன் காரணமாகவே தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக ' வாஷிங்டன் போஸ்ட் ' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.