ஆசிய வட்டார நாடுகள் சிலவற்றில் கடல் அரிப்பு, வரட்சி, வெள்ளப்பெருக்கு ஆகியவற்றால் ஏற்படும் பிரச்சினைகளை காடுகள் அழிப்பு மேலும் மேலும் மோசமாக்கியிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை ஒன்று குறிப்பிட்டுள்ளது.
ஆண்டுதோறும் 30 ஆயிரம் சதுர கிலோமீட்டர் அளவுள்ள காடுகளை ஆசிய நாடுகள் அழித்துவருவதாகவும் இந்த நிலைமை திருத்தப்பட வேண்டும் என்றும் ஐ.நா.மன்றத்தின் பொருளாதார சமூக ஆணையம் கேட்டிருக்கிறது.
அடுத்துவரும் தசாப்தங்களில் சுற்றாடல் பேரழிவுகளினால் தமது இருப்பிடங்களை இழக்கப்போகும் சுற்றுச்சூழல் அகதிகளைக் கையாளவது எப்படி என்று ஆசிய நாடுகளின் அரசுகள் திட்டங்களை உருவாக்குதல் அவசியம் என்றும் இந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.