இராக்கின் பாஸ்ரா நகரில் உள்ள மஹதி ஆயுதக் குழுவினர், தங்களது ஆயுதங்களை ஒப்படைப்பதற்கான காலக்கெடுவை நீடித்திருக்கிறார் பிரதமர் நூரி அல்-மாலிகி. ஷியா ஆயுதக்குழுவினர் ஆயுதங்களை ஒப்படைக்க மேலும் 11 நாட்கள் இருப்பதாகவும், அவ்வாறு செய்தால், அவர்களுக்கு ரொக்கத் தொகை வழங்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்திருக்கிறார்.
அதே நேரத்தில், கிரிமினல்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும் என்று இராக்கின் உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
மஹதி ஆயுதக்குழுவின் தலைவர் மொக்ததா அல்-சதாருக்கு ஆதரவான மத குருக்கள், அரசுக்குக் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். சண்டையை நிறுத்தி, பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியிருக்கிறார்கள்.