சீனாவின் பீஜிங்கில் ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெற உள்ள நிலையில், திபெத் நெருக்கடி குறித்து, உலகத் தலைவர்களால் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
சீன அரசாங்கம், திபெத், சீனாவின் ஒரு அங்கம் என குறிப்பிட்டு வருகிறது. ஆனால் திபெத் 1950களிற்கு முன்னர், தனி நாடாகவே இருந்ததாக திபெத்திய வரலாறு கூறுகிறது. பின்னர் 1950களில் திபெத், சீனா வசமானது.
அன்றிலிருந்து இன்று வரை திபெத், சீனாவின் பூரண கட்டுப்பாட்டில் இருக்கிறது. திபெத் குறித்து, சீனா பலமான வாதப் பிரதி வாதங்களை முன்வைத்து வருகிறது.
இதனால் உலகத்தின் கவனம், திபெத்திற்குள் குவிந்துள்ளது. திபெத்தியர்களை சீனா, அடிமைபட்டாளங்களாக பார்ப்பதாக, திபெத்தியர்களின் ஆன்மிகத் தலைவர், தலாய்லாமா குற்றம் சாட்டி வருகிறார்.
இந்நிலையில், நேற்று, ஆன்மீகத் தலைவர் தலாய்லாமா, சர்வதேச சமூகத்திடம் திபெத்தின் நெருக்கடி குறித்து, பீஜீங் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தும் படி, உருக்கமான வேண்டுகோள் ஒன்றையும் விடுத்துள்ளார்