உலகம் நாளுக்கு நாள் வெப்பமயமாகி வருகிறது. பருவ நிலையும் மாற்றங்களும் ஏற்படுகிறது. இந்த வெப்ப மயம், பருவநிலை மாற்றம் காரணமாக கடல் நீர்மட்டம் அதிகரிக்கும்.
அபாயம் ஏற்பட்டுள்ளதுடன் சுற்றுச் சூழலுக்கும் கேடு ஏற்படு கிறது. மனித குலத்துக்கு அச்சுறுத்தலாக இருக்கும் இந்த நிலையை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி பல்வேறு அமைப்புகளும் நாடுகளும் வற்புறுத்தி வருகின்றன.
இது தொடர்பாக விழிப்பு ணர்வை ஏற்படுத்த உலகம் முழுவதும் 371-க்கும் மேற்பட்ட நகரங்களில் இன்று 1 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப் படுகிறது. இன்று இரவு 8 மணி முதல் 1 மணி நேரம் மின்சா ரத்தை நிறுத்த பல்வேறு நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன.
சிட்னி, பாங்காக், லண்டன், சிகாகோ உள்பட ஏராளமான நகரங்கள் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கு பெறு கின்றன. சில நகரங்களில் ஏற்கனவே 1 மணி நேரம் மின்சாரம் இன்றி `இருட்டடிப்பு' நிகழ்ச்சி தொடங்கி விட்டது. `எர்த் ஹவர்' என்று இதற்கு பெய ரிட்டு இருக்கிறார்கள்.
இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் நகரில் நேற்றே இந்த நிகழ்ச்சி நடந்து விட்டது. 1 மணி நேரம் மின்சாரம் இன்றி நகரம் இருளில் மூழ்கியது. அது மட்டுமல்ல மின்சாரத்தை பயன்படுத்தாமல் பிரபல கலைஞர்கள் கலந்து கொண்ட இசை நிகழ்ச்சியும் அங்கு நடந்தது.
ஏற்கனவே கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இதேபோன்று மின்சா ரம் இல்லாத நேரம் கடை பிடிக்கப்பட்டது. இப்போது மற்ற நாடுகளும் இந்த முயற்சி யில் சேர்ந்து கொண்டன.