இந்தோனேஷியாவில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்தனர்.
இந்தோனேஷியாவின் கிழக்குப் பகுதியில் இன்று திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று காலை 7.53 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.7ஆக பதிவாகியிருந்தது.
இந்த நிலநடுக்கம் காரணமாக அங்குள்ள வீடுகள் மற்றும் கட்டடங்கள் அதிர்ந்தன. இதனால் பொதுமக்கள் கடும் பீதியடைந்தனர்.