ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலில் நேற்று இரவு இடம்பெற்ற முற்றுகை மற்றும் துப்பாக்கிச் சண்டையில், கடந்த ஞாயிறன்று அதிபர் ஹமீத் கர்சாய் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தொடர்புடைய மூவர் கொல்லப்பட்டதாக ஆப்கானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தவிர மற்றய பகுதிகளில் சந்தேகத்துக்குரிய மேலும் ஆறு பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக ஆப்கானிஸ்தானின் புலனாய்வுத்துறைத் தலைவர் கூறியுள்ளார்.
நேற்று நள்ளிரவுக்கு பின்னர் ஒரே நேரத்தில் மூன்று இடங்களில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில், காபூலிலுள்ள ஒரு வீட்டை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினரும் காவல்துறையினரும் உள்ளே இருந்தவர்களை சரணடையும்படி கூறினர்.
இதையடுத்து துப்பாக்கிச் சண்டை வெடித்தது. இதில் மூன்று பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த மோதலின் போது இருதரப்பினரும் ஆர் பி ஜி மற்றும் இயந்திர துப்பாக்கிகளை பயன்படுத்தி சண்டையிட்டனர்