ஈரானில் இன்று காலை ஏற்பட்ட திடீர் நில நடுக்கத்தால் 100 பேர் காயமடைந்தனர்.
ஈரானின் மேற்கு பகுதியில் உள்ள லாரஸ்தான் மாகாணத்தில் உள்ள 3 நகரங்களில் இன்று அதிகாலை 4.45 மணியளவில் இந்த பூகம்பத்தின் தாக்கம் கடுமையாக உணரப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரிக்டர் அளவு கோலில் 4.7 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் , கட்டங்கள் மற்றும் வீடுகள் குலுங்கின.இதனால் மக்கள் அலறியடித்து வீட்டைவிட்டு வெளியே ஓடி வந்தனர்.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி சுமார் 100 பேர் காயமடைந்ததாக ஈரான் அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
கடந்த 2006 மார்ச் மாதத்தில் இங்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 70 பேர் பலியாயினர்; 1,200 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது