வட மேற்கு பாகிஸ்தானில் இன்று நடந்த தற்கொலை தாக்குதலில் சுமார் 20 பேர் காயமடைந்தனர்.
பெஷாவரிலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கைபர் பழங்குடியின பகுதியில் உள்ள இஸ்லாமைய மதக்குழு ஒன்றில் இன்று புகுந்த மனித வெடிகுண்டு ஆசாமி ஒருவன் , தன் உடலில் கட்டியிருந்த குண்டை வெடிக்கச் செய்ததில் சுமார் 20 பேர் காயமடைந்ததாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தற்கொலை தாக்குதலில் ஈடுபட்டவன் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவனா அல்லது வேறு யாரேனுமா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.