உள்ளூரில் உணவுப் பொருட்களின் விலை ஏறுவதைத் தடுக்கவும், உணவுத் தட்டுப்பாட்டை தவிர்ப்பதற்காகவும் நேபாள அரசு, அரசி மற்றும் பிற உணவுத் தானியங்களின் ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உணவுப் பிரச்சனையை தவிர்க்க போதுமான அளவு உணவுக் கையிருப்பை வைத்திருக்க விரும்புவதாக ஒரு அதிகாரி தெரிவித்தார். கடந்த மூன்று மாதங்களி்ல் மாத்திரம் நேபாளத்தில் அரசியின் விலை 30 சதவீதம் அதிகரித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் இருந்துதான் அதிக அளவிலான அரிசி நேபாளத்துக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. பாசுமது அரசி வகை தவிர பிற அரசி வகைகளை ஏற்றுமதி செய்ய இந்திய அரசு மார்ச் மாதத்தில் முழுத் தடை விதித்தது.