உலகத்தின் செல்வாக்கு மிகுந்த மனிதர்களில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முக்கிய இடத்தை பிடித்துள்ளார்.
.
2008 ஆம் ஆண்டின் உலகத்தின் செல்வாக்கு மிகுந்த 100 மனிதர்களின் பட்டியலை அமெரிக்காவிலிருந்து வெளிவரும் டைம்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தொழிலதிபர் ரத்தன் டாடா, பெப்சி கம்பெனியின் தலைமை செயல் அதிகாரி இந்திராநூயி, திபெத் புத்தமத தலைவர் தலாய்லாமா, சீன அதிபர் ஹு ஜிண்டாவோ உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
உலகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய தலைவர்கள் மற்றும் புரட்சியாளர்கள், தலைமகன்கள் மற்றும் முன்னோடிகள், ஆய்வாளர்கள் மற்றும் சிந்தனையாளர்கள், கலைஞர்கள் மற்றும் பொழுதுபோக்காளர்கள் உள்ளிட்ட 5 பிரிவுகளில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய அரசியல் தலைவர்களுள் இந்த பட்டியலில் இடம்பிடித்த ஒரே தலைவர் சோனியா காந்தி. தலைவர்கள் மற்றும் புரட்சியாளர்கள் பட்டியலில் அவரது பெயர் இடம்பெற்றுள்ளது. இந்திராநூயி மற்றும் ரத்தன் டாடா ஆகியோர் சக்திவாய்ந்த தொழிலதிபர்கள் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார்கள்.
61 வயதான சோனியா காந்தியை பற்றி அந்த இதழில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில், ஒவ்வொரு நிலையிலும் அவரது வாழ்க்கை வரலாறு குறிப்பிடத்தக்கதாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல இந்திராநூயியை (வயது 52) உலகத்தரம் வாய்ந்த தலைவர் என்று அந்த இதழ் தெரிவித்துள்ளது.
நிபுணத்துவம் வாய்ந்த மனம், சந்தையை பற்றிய ஆழமான பார்வை, மனிதநேய பங்களிப்பு ஆகிய அனைத்தும் ஒருங்கே பெற்ற நூயி, உலக அளவிலான தொழில் ஜாம்பவான்கள் மத்தியில் அரிய தலைவராக திகழ்வதாக அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சாமான்ய மக்களின் காராக ரூ.1 லட்சம் விலையில் சிறிய ரக நானோ காரை அறிமுகப்படுத்தியதற்காக ரத்தன் டாடா (வயது 70) வெகுவாக புகழப்பட்டுள்ளார். பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் உள்ளிட்டோரும் சக்திவாய்ந்த மனிதர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்