ஆசிய நாடுகள் முழுவதிலும் ஜனநாயகம் தழைத்தோங்கவும், அமைதி நிலவவும் இந்தியாவுடன் இணைந்து அமெரிக்கா செயல்பட்டு வருகிறது என்று அதிபர் ஜார்ஜ் புஷ் தெரிவித்தார்.
ஆசிய அமெரிக்க பராம்பரிய மாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் பேசுகையில், ஆசிய நாடுகள் முழுவதிலும் சுதந்திரமான சூழல் நிலவுவதற்கான நம்பிக்கையுடன் இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்பட்டு வருவதாக கூறினார்.
திபெத் பிரச்சனை குறித்து அவர் கூறுகையில், தலாய் லாமாவின் பிரதிநிதிகளைச் சந்திக்க சீன அரசு முன்வந்திருப்பது வரவேற்க்கத்தக்கது என்றும், இப்பிரச்சனை தொடர்பான பேச்சுவார்த்தையைப் புதுப்பிப்பது அவசியம் என்றும் தெரிவித்தார்.
மேலும், இந்தப் பேச்சுவார்த்தை உண்மையானதாக இருக்க வேண்டும் என்று கூறிய புஷ், மியான்மரின் ராணுவ ஆட்சிக்கு எதிராக அமெரிக்கா மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை மற்ற நாடுகளும் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.