பெட்ரோலிய எண்ணை ஏற்றுமதி வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நாடுகள் ஓபெக் என்ற ஒரு குழுமத்தை ஏற்படுத்தியுள்ளதுபோல அரிசி உற்பத்தி செய்யும் நாடுகளிடையிலும் ஒரு குழுமம் ஏற்படுத்தப்படுகின்ற யோசனைக்கு கிழக்கு ஆசியாவில் மீண்டும் ஆர்வம் துளிர்த்துள்ளது.
இந்த யோசனை குறித்து சில அண்டை நாடுகளுடன் விவாதிக்கும் திட்டங்கள் இருப்பதை தாய்லாந்து அரசாங்கம் சார்பாக பேசவல்ல அதிகாரி தெரிவித்துள்ளார்.
தற்போது விலை அதிகமாக இருப்பதைச் சமாளிப்பதற்காக, உற்பத்தி பெருகி அதன் விளைவாக எதிர்காலத்தில் விலை வேகமாக குறைய நேருமோ என்ற கவலை அரிசி உற்பத்தி நாடுகளுக்கு ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது.
ஆனால் அரிசி உற்பத்தி நாடுகளுக்கென்று ஒரு குழுமம் உருவானால் அதனை செயற்பட வைப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல. எண்ணை உற்பத்தி நாடுகளின் ஓபெக் அமைப்பிலிருந்து இது சில முக்கியமான மாற்றங்களை கொண்டிருக்கும்.