இங்கிலாந்திலும், வேல்ஸ் பகுதியிலும் நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் தமது தொழில் கட்சி மிகவும் மோசமான தோல்வியை அடைந்துள்ளதாக பிரித்தானிய பிரதமர் கோர்டன் பிரவுண் ஒப்புக்கொண்டுள்ளார்.
தசாப்த காலத்தில் அந்தக் கட்சி கண்ட மோசமான தோல்வி இதுவாகும்.
டொனி பிளயர் அவர்களிடம் இருந்து பிரதமர் பொறுப்பை ஏற்ற பின்னர் முதல் தடவையாக ஒரு முக்கிய தேர்தல் சோதனையை எதிர்கொண்ட கோர்டன் பிரவுண் அவர்கள், தான் இதனால் ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும், மக்களின் கருத்தை தான் செவிமடுப்பேன் என்றும் கூறியுள்ளார்.
பெருமளவு முடிவுகள் வந்துள்ள நிலையில், 24 வீத வாக்குகளை மாத்திரம் பெற்று லிபரல் கட்சிக்கும் அடுத்ததாக மூன்றாவது இடத்தையே தொழில்கட்சி பெறும் என்று பிபிசியின் தேர்தல் முடிவு ஆய்வுக்குழு கூறியுள்ளது.
எதிர்க்கட்சியான கொன்சர்வேட்டிவ் கட்சி இந்த தேர்தலில் நல்ல முன்னேற்றத்தைப் பெற்றுள்ளது.