பாகிஸ்தானில் அதிபர் முஷாரப்பால் பதவி நீக்கம் செய்யப்பட்ட நீதிபதிகள் அனைவரும் வரும் 12ம் தேதி மறு நியமனம் செய்யப்படுவார்கள் என்று முன்னாள் பிரதமரும் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவருமான நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
.
இந்தப் பிரச்சனை தொடர்பாக துபாயில் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் துணைத் தலைவர் ஆசிப் அலி ஜர்தாரியுடன் பேச்சு நடத்திவிட்டு லாகூர் திரும்பிய பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
ஆனால் இதை எதிர்த்து அதிபர் முஷாரப் நீதிமன்றத்தை அணுக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.