மியன்மாரை தாக்கிய பாரிய சூறாவளியையடுத்து அந்நாட்டின் நான்கு மாநிலங்களில், நேற்று ஞாயிற்றுக்கிழமை அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மணிக்கு 190 கிலோ மீற்றர் வேகத்தில் வீசிய இந்த நர்கிஸ் சூறாவளி காரணமாக, யங்கொனில் குறைந்தது 4 பேர் பலியாகியுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர். மேலும் இச்சூறாவளியால் அந்நகரிலுள்ள மரங்கள் பலவும் விழுந்ததுடன் அநேக கட்டிடங்களும் சேதமடைந்துள்ளன.
மேலும் பல இடங்களில் சூறாவளியையடுத்து மின்சாரம் மற்றும் நீர் விநியோகங்கள் துண்டிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இச் சூறாவளியின் தாக்கத்தால் இராவடிப் பிரதேசத்திலுள்ள சில நகரங்களில் கட்டிடங்களின் அரைப்பகுதி சேதத்திற்குள்ளாகியுள்ளதாக கூறப்படுகிறது. மியன்மாரிலிருந்து வடகிழக்கே வடதாய்லாந்தை நோக்கி நகர்ந்த இச்சூறாவளி காரணமாக, அங்கு ஏற்கனவே கடும் மழை பெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது