சீனாவில் ஒலிம்பிக் போட்டி விளையாட்டுகள் நெருங்கி கொண்டுள்ள நிலையில் , தலைநகர் பீஜிங்கில் உள்ள தியான்மென் சதுக்கத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக தியான்மென் சதுக்கத்தின் அருகே துப்பாக்கி, வெடி மருந்துகள், கத்தி உள்ளிட்ட ஆபத்தான பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவு இன்று முறைப்படி பிறப்பிக்கப்பட்டது.இந்த உத்தரவுக்கு என்ன காரணம் என்று அரசு தரப்பில் தெரிவிக்கபடவில்லை என்ற போதிலும்,ஒலிம்பிக் போட்டியை கருத்தில் கொண்டே சீன அரசு இந்த நடவடிக்கையை எதிர்கொண்டுள்ளதாக தெரிகிறது.