பாகிஸ்தானின் வடமேற்கே உள்ள பன்னு நகரில் தற்கொலைப் படையை சேர்ந்த மனித வெடிகுண்டு நடத்திய தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். மேலும் 5 பேர் இந்தத் தாக்குதலில் படுகாயம் அடைந்தனர்.
.
சைக்கிள் ரிக்ஷாவில் வந்த அந்த மனிதவெடிகுண்டு ராணுவ பகுதி ஒன்றிற்குள் நழைய முயன்றபோது போலீசார் அந்த நபரை தடுத்து நிறுத்தினர்.
உடனே அவன் தன் உடலில் கட்டியிருந்த குண்டை வெடிக்கச்செய்தான். இதில் அந்த மனித வெடிகுண்டு தவிர இரண்டு போலீசார் உயிரிழந்ததாக தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
ஆனால் ஒருவர் மட்டுமே கொல்லப்பட்டதாக காவல்துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.