அமெரிக்காவும், ரஷியாவும் இராணுவம் சாராத அணுத்திட்ட உடன்பாடு ஒன்றில் கையொப்பமிட்டுள்ளன. ரஷியாவின் அதிபரான விளாடிமிர் புடின் பதவிக் காலத்தின் இறுதி நாளான இன்று இந்த இந்த ஒப்பந்த்தம் கையெழுத்தாகியது.
இந்த உடன்பாட்டின் மூலம் ரஷிய மற்றும் அமெரிக்க நிறுவனங்களுக்கு இடையேயான தொழிநுட்பப் பரிமாற்றமும் பரஸ்பர வர்த்தகமும் ஏதுவாகும்.
இரானிடமிருந்தான அணுஆயுத அச்சுறுத்தல் இருக்கும் என்று எண்ணப்படுவதின் பின்புலத்தில் அமெரிக்கா மற்றும் ரஷியா இடையே அணுதிட்டம் தொடர்பான ஒத்துழைப்பு ஒரு தேக்க நிலையிலேயே இருந்து வந்தது.