பாகிஸ்தானின் வசிரிஸ்தான் மலைப்பகுதியில் சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் பதுங்கியிருப்பதாக அமெரிக்க பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
.
அமெரிக்காவை சேர்ந்த பிரபல பத்திரிகையாளரான ஸ்டீவ் போல் பின்லேடன் குடும்பத்தினர் பற்றி புத்தகம் ஒன்றை எழுதி புகழ்பெற்றவர். இந்நிலையில் ஜெர்மன் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர், பின்லேடன் பாகிஸ்தானில் உள்ள வடக்கு வசிரிஸ்தான் பகுதியில் பதுங்கியிருப்பதாக தெரிவித்துள்ளார்.
அந்த பகுதியில் உள்ள பழங்குடியினர் மத்தியில் பின்லேடனுக்கு ஆதரவு இருப்பதால், காவல்துறையினர் மற்றும் ராணுவம் அந்த பகுதிக்குள் நுழையக்கூட தயங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.
பின்லேடன் நண்பர்கள் துணையோடு ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு மாறிக்கொண்டிருப்பதாக கூறி யஅவர், என்றாவது ஒருநாள் பின்லேடனை யாராவது ஒருவர் காட்டிக்கொடுப்பது நிச்சயம் என்று கூறியுள்ளார்.