அமெரிக்க அதிபர் ஜோர்ஜ்புஷ்ஷின் மூத்த மகள் ஜென்னாவுக்கு வரும் 10ம் திகதி திருமணமாம்! காதலனையே கைபிடிப்பதாக தெரிவிப்பு. அதிபர் புஷ்ஷின் மூத்த மகள் ஜென்னாவுக்கும் ஹென்றி ஹேகர் என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. கேம்ப்டேவிட் ஓய்விடத்தில் அதிபர் புஷ் தனது மனைவி லாராவுடன் ஓய்வெடுத்து கொண்டிருந்தபோது ஹென்றி ஹேகர் நேரில் சென்று ஜென்னாவை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக கூறினாராம்.
வழக்கமான தந்தைகள் போல அப்போதைக்கு எந்த கருத்தையும் தெரிவிக்காமல் மெளனமாக இருந்த புஷ், பின்னர் மகள் ஜென்னாவின் கருத்தை அறிந்து காதலுக்கு பச்சை கொடி காட்டினாராம். தற்போது திருமண ஏற்பாடுகளையும் செய்துள்ளார். வருகிற சனிக்கிழமை (10ம் திகதி) அன்று டெக்சாஸ் நகரில் கிராஃபோர்டு என்ற இடத்தில் உள்ள மிகப் பெரிய பண்ணை வீட்டில் இந்த திருமணம் விமர்சையாக நடைபெறவுள்ளது. இதற்காக அந்த பண்ணை வீடு விழாக் கோலம் பூண்டுள்ளதாம்.