ஈராக்கிலிருந்து 3,500 அமெரிக்க வீரர்களை விரைவில் வாபஸ் பெறவுள்ளதாக அமெரிக்க இராணுவம் நேற்று தெரிவித்துள்ளது.
ஜோர்ஜியாவிலுள்ள படைத்தளத்துக்கு இன்னும் சில வாரங்களில் வீரர்கள் திரும்புவார்களென பென்டகன் செய்தி வெளியிட்டுள்ளது.
ஈராக்கிலிருந்து 30 ஆயிரம் வீரர்கள் வாபஸ் பெறவுள்ள நிலையில் இதன் முதற்கட்டமாக 3,500 வீரர்கள் திரும்ப அழைக்கப்படுகின்றனரெனவும்,
ஜூலை மாதத்துக்குள் 30 ஆயிரம் வீரர்களும் அமெரிக்கா திரும்பி விடுவார்களெனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஈராக்கில் தற்போது ஒரு இலட்சத்து 56 ஆயிரம் அமெரிக்க வீரர்கள் உள்ளதுடன் அமெரிக்க கூட்டுப் படையைச் சேர்ந்த 10 ஆயிரம் வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஈராக் போர் தொடங்கிய 2003ஆம் ஆண்டு முதல் இதுவரை 4 ஆயிரத்து 71 வீரர்கள் பலியாகியுள்ளதாகவும்,
கடந்த ஆண்டில் மட்டும் 166 வீரர்கள் பலியாகியுள்ளனரெனவும் இராணுவம் தெரிவித்துள்ளது.