அமெரிக்காவின் பயங்கரவாதப் பட்டியலில் நெல்சன் மண்டேலா தொடர்ந்து நீடித்து வருகின்றார். தென்னாபிரிக்காவில் இனவெறி அரசுக்கு எதிராக போராட்டத்தை நெல்மண்டேலாவை அப்போதை தென்னாபிரிக் அரசாங்கம் பயங்கரவாதி என அறிவித்தது. இதனை உள்வாங்கிய அமெரிக்கா நெல்சன் மண்டேலாவின் பெயரை பங்கரவாதிகள் பட்டியலில் இணைத்திருந்தது.
தற்போது தென்னாபிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா மற்றும் தென்னாபிரிக்க தேசிய காங்கிரசில் அங்கம் வகிக்கும் தலைவர்களின் பெயர்களையும் பங்கரவாதிகள் பட்டியலிருந்து நீக்கும் முகமாக தீர்மானம் ஒன்று அமெரிக்காவில் கொண்டு வர ஹொவர்டு பெர்மன் தீர்மானித்துள்ளார்.
இதன் மூலம் பயங்கரவாதிகள் பட்டியலிருந்து நெல்சன் மண்டேலாவின் பெயர் நீக்கப்பட்டால் மட்டுமே நெல்சன் மண்டேலா அமெரிக்கா செல்லமுடியும். இல்லாவிட்டால் சிறப்பு அனுமதி பெற்று அமெரிக்கா செல்லமுடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.