பாகிஸ்தான் இன்று ராட் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டது.
.
இந்தியா நேற்று அக்னி3 ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதனை செய்தது. இந்தியா ஏவுகணை சோதனை நடத்திய மறுநாளான இன்று பாகிஸ்தான் ராட் ஏவுகணை எனப்படும் ஹாட்8 ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதனை செய்தது.
இந்த ஏவுகணை 350 கிலோ மீட்டர் தூரம் சென்று தாக்கும் ஆற்றல் கொண்டது. அணு ஆயுதங்களை ஏற்றிச் செல்லும் திறன் படைத்தது. இந்த ஏவுகணை பாகிஸ்தானின் ராணுவ பலத்தை அதிகரிக்கும் என்று அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த சோதனையை நடத்திய விஞ்ஞானிகளுக்கு பாகிஸ்தான் அதிபர் முஷாரப் மற்றும் பிரதமர் யூசப் கிலானி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் அக்னி ஏவுகணைக்கு போட்டியாக பாகிஸ்தான் இந்த சோதனையை நடத்தி உள்ளது.