இஸ்ரேலின் பிரதமர் ஈடு ஒமர்ட் தான் இஸ்ரேலின் பிரதமராவதற்கு முன்னர் சட்டவிரோதமான முறையில் நூறு ஆயிரம் டொலர்களை பெற்றுள்ளார் என ஸ்ரேலிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இவர் இந்த பணத்தை சட்ட விரோதமான முறையில் ஜெருசலத்தில் வைத்து அமெரிக்காவின் பிரபல வர்த்தகர் ஒருவரிடமிருந்து பெற்று கொண்டுள்ளார் என இஸ்ரேல் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்..
இது தொடர்பான விசாரணைகளை ஸ்ரேல் பொலிஸார் ஈடு ஒமர்ட் இடம் மேற்கொண்டுள்ளனர்.இதேவேளை தன்னிடம் இஸ்ரேலின் பிரதமர் ஆயிரம் டொலர்களைபெற்றுகொண்டது உண்மை என அமெரிக்க வர்த்தகர் தலன்ஸ்கை தொலைகாட்சி ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.இந்த பணம் எதற்கு பயன் படுத்தப்பட்டது எனபது இதுவரை தெரியவில்லை என் இஸ்ரேல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இப்பணத்தை தாம் பெற்றுகொள்ளவில்லை என இஸ்ரேலின் பிரதமர் ஈடு ஒமர்ட் மறுப்பு தெரிவித்துள்ளார்..