ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத்திட்டத்தின், இரண்டு விமானங்களில் அனுப்பப்பட்ட உணவு உதவியை பர்மிய அரசாங்கம் தடுத்து வைத்துள்ளது.
நர்கீஸ் சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான, பெரும்பாலும் உணவு உதவியைக் கொண்ட 38 தொன் பொருட்களை, ரங்கூன் சர்வதேச விமான நிலையத்தை விட்டு வெளியே கொண்டு செல்வது தடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அதிலுள்ள உணவுப் பொருட்களை விநியோகிப்பது தொடர்பாக அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக உலக உணவுத் திட்டம் கூறியுள்ளது.
சனிக்கிழமை மேலும் இரண்டு விமானங்களில் உணவுப் பொருட்களை அனுப்பப்போவதாக உலக உணவுத் திட்டம் கூறியுள்ளது.
ஆனால் விமானங்களை அனுப்புவது இடைநிறுத்தப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருந்ததை உலக உணவுத் திட்டம் மாற்றிக்கொண்டுள்ளது.
வெளிநாட்டு உதவிகளை ஏற்க தாம் தயாராக இருப்பததாகவும், ஆனால், அவற்றின் விநியோகத்தை அரசாங்க கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புவதால், வெளிநாட்டு தேடுதல் மற்றும் மீட்பு குழுக்களை ஏற்க முடியாது என்றும் பர்மிய இராணுவ ஆட்சியாளர்கள் கூறியிருந்தனர்.
ஆனால், தேவையான பகுதிகளுக்கு உதவியை கொண்டு செல்வதற்கான வசதியை பர்மிய இராணுவம் கொண்டிருக்கவில்லை என்று சர்வதேச தொண்டு நிறுவனங்கள் நம்புகின்றன