சீனா மற்றும் ஜப்பானுக்கு இடையிலான உறவில் ஒரு மைல்கல் என்று விவரிக்கப்படும் ஐந்து நாள் விஜயத்தை சீன அதிபர் ஹு ஜிண்டாவ் முடித்துள்ளார்.
ஜப்பான் அமைதிக்காக பாடுபடுகிறது என சீன அதிபர் கூறியுள்ளார். அத்தோடு பல தசாப்த காலமாக குறைந்த வட்டியில் சீனாவுக்கு ஜப்பான் கொடுத்து வரும் கடனுக்கும் அவர் நன்றி கூறினார்.
மிகவும் திட்டமிடப்பட்டு இடம்பெற்ற இந்த விஜயத்தில் எத்தரப்பும் எவ்வித தவறையும் செய்யவில்லை என பிபிசி செய்தியாளர் கூறுகின்றார்.
ஆனால் திபெத்திற்கு ஆதரவானவர்களின் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. அத்தோடு மனித உரிமைகள், சீன உணவு பொருட்களின் பாதுகாப்பு, கடலுக்கடியில் கிடைக்கும் எரிவாயு தொடர்பான விஷயங்களில் இருதரப்பிற்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் தொடர்கின்றன.