தைவானில் இன்று அதிகாலை கடும் பூகம்பம் தாக்கியது. எனினும் இந்த பூகம்பம் காரணமாக உயிரிழப்போ பொருட்சேதமோ ஏற்பட்டதாக உடனடித் தகவல்கள் வெளியாகவில்லை.
.
தைவானில் உள்ள சுவோ என்ற இடத்தில் மையம் கொண்ட இந்த பூகம்பம் ரிக்டர் அளவுகோளில் 5.3 என்ற அளவில் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உள்ளூர் நேரப்படி அதிகாலை 3.41 (இந்திய நேரம் நள்ளிரவு 1.11) மணிக்கு ஏற்பட்ட இந்த பூகம்பம் காரணமாக மக்கள் அலறியடித்துக் கொண்டு தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தைவானில் அடிக்கடி பூகம்பங்கள் தாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.